கன்னியவள் இடை
கன்னியவள் இடை
==================
#வல்லினம்
****************
போகின்றாய் சொல்லாமல் பின்னால்
வருகிறேனடி...
தகிக்கும் தாகத்தை
தவமாய் சுமக்கிறேனடி...
(போகின்றாய்
தகிக்கும்)
தேசமே விழி பேசும் காவியமே
பாசமே மொழி பேசும் ஓவியமே
(தேசமே
பாசமே)
இடை என்னும் தாய் மடியில்
தடை இல்லாமல்
என்னை தழுவிக்கொள்ளடி
(இடை
தடை)
காதலை காணும் முன்னே கன்னியவள்
சாதகத்தை கண்டு விட்டேன் கண்ணில்
(காதலை
சாதகத்தை)
தாபம் தீராமல் காதலில் தவிக்கிறேனடி
சாபமாவது தந்து
என்னை சாய்த்திடடி
(தாபம்
சாபமாவது)
கறிக்கடை ஆடாய் உயிரற்று கிடக்கிறேனடி
மறித்து பேசாமல்
மனதோடு வந்துவிடடி
(கறிக்கடை
மறித்து)
#மெல்லினம்
******************
அங்கமா மதுக்கிண்ணமா சொல்லடி கண்மணி
தங்கமே தகரத்தை பொன் ஆக்கினாய்
(அங்கமா
தங்கமே) *விதி விலக்கு
வஞ்சியே முல்லைக் கொடியே உந்தன்
கொஞ்சும் குரல்
கேட்டு பூமிசுழலுதடி
(வஞ்சியே
கொஞ்சும்) *விதி விலக்கு
ஆணைகள் இட்டேன்
உன்னை தொடும்
கணைகள் என்னை
உரசி போகவேண்டும்
(ஆணைகள்
கணைகள்)
மந்தகாச மங்கையே
என்னையாளும் அரசியே
எந்தநாளும் உன்னையே
சேர்ந்துவாழ ஆசையே
(மந்தகாச
எந்தநாளும்) *விதி விலக்கு
கமழும் கமலமே
செய்யுளின் பொருளே
அமலன் படைத்திட்ட
அழகான உயிர்நீயே...
(கமழும்
அமலன்)
சுனையே அன்பை பொழி இற்றைக்கே...
மனையே என்னோடு
வந்துவிடு குடிலுக்கு...
(சுனையே
மனையை)
#இடையினம்
******************
கயல் போன்ற உன் கண்கள்
அயலாரை இழுக்கும் மாயம் அறிவாயோ!...
(கயல்
அயலாரை)
கரம் பற்றி நித்தம் நாளும்
உரமாக முத்தம் பல தரமாட்டாயோ!...
(கரம்
உரமாக)
கலையே அழகே அமுதே தமிழே
சிலையே உயிரில் கரைவாய் நீயே
(கலையே
சிலையே)
அவையில் வீற்றிருக்கும் புலவர்கள் யாவரும்
சுவையில் பூரணமாய் பாடா எழிலே
(அவையில்
சுவையில்)
செழித்து வளரட்டும் தரணியில் காதல்
அழித்து பொசுக்கிடுவோம் உடல்களின் தூரம்
(செழித்து
அழித்து)
களைந்தெடுத்தோம் அகம் இணைந்தோம்
கன்னியிவள்
வளைந்தெடுத்த இடை தானே புதுகாவியம்
(களைந்தெடுத்தோம்
வளைந்தெடுத்த)
~ பிரபாவதி வீரமுத்து