முக நூல் வலை தளை
அளவிலா அக்கப்போர்
அரசியல் விரோதங்கள்
மதங்களின் மேன்மைகள்
மதமின்மையின் கோசங்கள்
சமூகச் சீர்கேடென
வசை பாடும்
சீரமைக்க சிறிதும்
இல்லா முயற்சிகள்
நாட்டுப் பற்றிலும்
சில தயக்கங்கள்
சில கவிதைகள்
காதல் வானில்
சிறகு விரிக்கும் வரிகள்
கவிஞர்கட்குள் பூசல்
பிடிவாதக் கொள்கைகள்
பிடிபடா வாதங்கள்
கற்பனையிலேயே காலாட்டி
கதை பரப்பும் ஹேஷ்யங்கள்
தூண்டி விட்டுத் துயில்
கெடுக்கும் சாகசங்கள்
தான் நம்புவதை பிறர்
நம்ப வேண்டுமென மூர்கங்கள்
தினம் குடைச்சலுக்கு வித்திட்டு
நேசம் விரும்பும் அண்டைகள்
இடையே மனதை
இலேசாக்க நகைச்சுவை
எங்கோ ஒரு ஆக்கப்
பணியின் தாக்கங்கள்
ஒரு குழப்பமான சிக்கலில்
மனம் தளர்ந்து தூங்க
விடிந்ததும் மீண்டும் துரத்தும்...
--- முரளி