பெண்
கடவுளின் தவப்பிறப்பு,
மனிதனின் தெய்வப்பிறப்பு
ஆசைகளின் இருப்பிடம்
கண்ணெதிரே இறைவன் வாழுமிடம்
பிறந்த நாழிகை முதல்
குடும்பத்தின் விளக்காகிறாய்
தம்பிக்கு தாயாகவும்
தமயனுக்கு குழந்தையாகவும்
தகப்பனுக்கு இளவரசி என பெரும் பட்டங்கள்
பெண்மை கண்டநாள் முதல்
பொறுமை காக்கிறாய்
மனம் விரும்பிய மாங்கல்யத்தை தேடி
உன் மனை விட்டு பிரிகிறாய்
மலைபோல் கனவுகளுடன்
பிள்ளைவரம் பெற்று தாய்மைஎனும்
கோயிலுக்கு தெய்வமாகிறாய்
மெழுகாய் உருகினாய் உன்னுயிர் வந்த
ஜோதி என்றும் நிலைத்திட
எல்லை மீறி தியாகம் கடக்கின்றது
தில்லை நாதனை கேட்பது ஒன்றுதான்
விடியலைக்கான இப்பெண் குலத்திற்கு
வல்லமை தாராயோ