பொருள்கள்
விவசாயத்தைப் பற்றி அறியாதவர்களை கூட கையில் ஏர் பிடித்து பயிர்களை சீரமைக்க வைக்கும் ,,,,---------------------
-------------------------சீப்பு!!!.....
உன்னால் தான் மனிதன்
மனிதனாகவே தெரிகிறான்,,,------------------------------உடை!!!.....
வியர்வைத் துளிகள் சேர்ந்துக்
குட்டையாகிவிட்டது கையில்,,,,------------------------------கைக்குட்டை !!!....
அவ்வப்போது கையில்க் கூட
நாக்கு முளைத்துவிடுகிறது
எழுத்துகள் மூலம் பேச,,,,,,--------------------------------------பேனா!!!....
உழைத்து உழைத்து தேய்ந்தாலும் பாவம்
விட்டுக்குள் அனுமதி இல்லை,,-------------------------செருப்பு!!!....,