ஹைக்கூ சாரல் 11
ஹைக்கூ சாரல் 11
* விடியலின் தொடக்கம்
மறையத் தொடங்குகிறது
நிலா
@ பனிவிழும் இரவு
போர்த்திக் கொள்கிறது
மேகத்தை நிலவு
@ ஆசை ஏதுமில்லை
அழகாய் ஜொலிக்கிறது
தங்கத்தில் புத்தர்சிலை
@ என்னைக்காண ஏக்கத்தில்
தினமும் தேய்கிறாள்
-நிலாமகள்
@ நிழலாய் பிறந்து
நிஜத்தில் முடிகிறது
-கனவு
-மூர்த்தி