உன் சாகசப் பார்வைகளாலே
உன் சாகசப் பார்வைகளாலே
சம்மதம் சொல்வாயா என் மடி சாய்ந்து
சங்கீதம் இசைப்போம் நம் இதழ் சேர்த்தே
இதழ் யுத்தத்தில் கரைவோம் நம் கரம் கோர்த்தே
புது சரித்திரம் படைப்போம் காதல் வானிலே...
உன் இடை மச்சத்தில் என் உயிர் மிச்சம் வைப்பேனடி
உன் அதரத்தை என் உதிரத்தால் சுவைப்பேனடி
உன் கன்னத்தில் இதழ் முத்திரை பதித்தே
என் உதட்டினை செவ்வானமாய் உருமாற்றுவேனடி...
தாளங்கள் இசைப்பேனடி உன் இடை மீதிலே...
என் தாபங்கள் தீர்ப்பேனடி உன் இதழ் தேனிலே..
என் கோபங்கள் மறப்பேனடி உன் மடி ஊஞ்சலில்
எனை மொத்தமாய் தொலைப்பேனடி உன் விழி அம்பிலே..
என் கவலைகள் மறந்து உனக்குள் புதைவேன்
நொடியிலே...
இந்த அகிலம் துறந்து உன் காலடி சேர்வேன்
உன் சாகசப் பார்வைகளாலே....