கணைகள் இரண்டும் தேடுதே

கணைகள் இரண்டும் தேடுதே
என் இதயம் ஒன்றும் கேட்குதே
மதுவையும் மாதுவையும் நம்பி இன்று
என் மானமும் நடுவீதியில் போகுதே...!

காதலி தந்த ஒற்றைத்தலைவலி
ஒருதலை காதல் ஆனதோ...!
என் அன்பும் அவள் காலில் விழுந்து
வாழாமல் காதலும் சாகுதோ...!

என் காதலும் அவள் காமத்தால்
கடந்த போனால் என்ன செய்வேன்..?
கைகோர்த்து நடந்த வீதியில்
இன்னொருவன் கூட...

மது அருந்தியும் மாதுவை மறக்க முடியவில்லை
அவள் கொடுத்த வலியும் அழியவில்லை
ரணமும் குறைவதுமில்லை
மரணமும் வருவதுவில்லை
நித்தமும் மதுவோடு எழுந்தாலும்
விடிந்தாலும் என் வாழ்வு இரவு தானே...!
================================
பிரியமுடன்,
ஜ.கு.பாலாஜி

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (23-Oct-16, 4:07 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 253

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே