அலைபேசி
யன்னல் ஓரமாய்
காற்றில் ஆடியபடி
பறந்து வரும் இலை
சருகாய்ப் போகும்
கால அளவே
உறவுகளுக்கிடையிலான தூரம்..!
உலகம் சுருங்கி
அடங்கிக் கொண்டது
மனிதனின் உள்ளங்கைக்குள்...!
தொட்டு விடும் தூரத்தில்
இருந்தும் தொடர்பு
கொண்டு கதைக்கிறார்கள் அலைபேசியில்...!
கிராமம் முதல் நகரம் வரை
பாவனை செய்து
தன் வசம் கொள்கிறான்
மனிதன் அறிவியலை...!
தொழில் விருத்தியின் மூலவேர் நாடுகளுக்கிடையிலான தொடர்பு
அறிவியல் வளர்ச்சியே
அலைபேசி ப்பாவனை...!
காதல் மொழி பேசி
காதலனைக் கைப்படித்து
திருமணத்தில் இணைய வைத்துக்
வாழ வைப்பதும் இதுவே..!
மாணவசமூகம் சீரழிவும்
கன்னியவள் கற்பை இழந்து
உயிரை மாய்ப்பதும் அலைபேசியே..!
நன்றுமுண்டு தீதுமுண்டு
அலைபேசி பாவனையில்...!
சி.பிருந்தா
மட்டக்களப்பு