நதிக்கரை ஞாபகங்கள்

நதிக்கரை ஞாபகங்கள்.....!
நதிக்கரை ஞாபகங்களில் நமத்து போகிறது
நாளும் நான் காணும் கனவுகள்...!
ஆம் தோழி
அங்கே நாம் செய்து கொண்ட
ஈரத் தழுவல்களை நினைத்தால்
இப்போதும் இதயம் சில்லிடுகிறது..!
அந்த சேற்று நதிக்கரையில்
நீயும் நானும் சேர்ந்து விளையாடி
கட்டி புரண்டு உடையெல்லாம்
கறையாக்கி கொண்ட கணங்கள்
கண்ணோரம் உருள்கிறது கண்ணீர் துளிகளாய்...!
அடியே... என் பால்ய சிநேகிதியே
கால ஓட்டத்தில்
மாற்றங்கள் உடலுக்குத்தான் உள்ளத்திற்கில்லை..!
நமக்குள்ளான நட்பு முறை
ஊராரின் கண்களுக்கு உறுத்தலாய் இருக்கத்தானே
இடைவெளியொடு இருக்கிறாய். – சஹியே!
தோழியாய் வர இயலாதென்றால்
காதலியாய் வா! காத்திருக்கிறேன்
ஈரம் காயாத விழிகளோடும்
ஓரம் கருகாத ஒற்றை ரோஜாவோடும்
அதே நதிக்கரையில்............
உன் பாசத்திற்காய்
பழைய நதிக்கரை ஞாபகங்களை சுமந்தபடி....!

எழுதியவர் : புதினக்கவி (24-Oct-16, 12:44 pm)
பார்வை : 83

மேலே