காதல்

சிவகங்கை மாவட்டத்தில அமைந்துள்ள அழகான ஒரு கல்லூரி . அந்த கல்லூரியில் பல்வேறு நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். அங்கே தான் தேவியும் படிக்கிறாள். அவளுக்கு தன் தோழியுடன் பேருந்தில் போவதில் அவளுக்கு மிகவும் பிடிக்கும். தேவியை ஒருதலையாக காதலித்து வந்தான் பிரபு. தேவி மிகவும் அழகானவள். அதற்கு ஏற்றாற்போல் பணம் படைத்தவள். பிரபு தன் காதலை தேவியிடம் கூற சொல்ல போகும் போது அவனை ஒன்று தடுக்கும் அது அவனது நிலையை உணர்த்தும். அவன் பணத்தால் ஏழை என பட்டமளிக்கப்பட்ட ஒரு நடுத்தர பையன் பிரபு.

தினமும் காலையிலும், மாலையிலும் அவள் கல்லூரி செல்லும் போது அவளை பேருந்து நிறுத்தத்தில் பார்த்து பார்த்து மகிழ்ந்தான் பிரபு.பிரபு இன்னும் காதலை தேவியிடம் கூறவில்லை.
ஒரு நாள் தேவிக்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்தார் பிரபு. தன் காதலை சொல்லவில்லை என்றால் அவள் வேரொருவருக்கு சொந்தமாகி விடுவாள் என்பதை நினைத்து தன் காதலை சொல்கிறான். .... தேவிக்கு சரியான கோபம் போய் நாயே உன் மூங்சியை கண்ணாடியில் பார்த்திருக்கியா, அத விடு உன்கிட்ட அப்படி என்ன வசதி இருக்கு என்னை வசதியாக வச்சி காப்பாத்த. இதோ பார் இவள் காதலன் இவள் பிறந்த நாளுக்கு மோதிரம்( ring) போட்டிருக்கான் என்று அவள் தோழியின் கையை காமித்தாள். உன்னால் ஒரு புடவை வாங்கி தர முடியுமா என்று பிரபுவை அவ்வளவு பேர் முன்னால்அவமானப்படுத்திவிட்டால் தேவி. அவன் கண்ணில் கண்ணிரோடு செல்கிறான். அன்று தேவிக்கு விபத்து நடந்தது அவள் தன் கண் பார்வை போனது. அவள் வீட்டார்கள் தனது பண வலிமையை பயன்படுத்தி தேவிக்கு கண் தேடுகின்றனர். ஆனால் கண் எங்கும் கிடைக்கவில்லை.சில மாதங்களுக்கு பிறகு கண் கிடைத்து விட்டது என்று தகவல் வந்தது. உடனே தேவிக்கு கண் அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு நடக்கிறது. இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு பார்வை வந்துவிடும் என்று மருத்துவர் தேவியிடம் கூறினார். தேவிக்கு மிகவும் சந்தோசம் பார்வை கிடைக்கும் நாள் தேவிக்கு பிறந்தநாள் கூட. அன்று தேவிக்கு கண் கட்டை பிரித்தனர் அவளுக்கு கண் தெரிந்தது பார்த்தால் மேஜையில் ஒரு கிப்ட் பார்சல் இருந்தது கூட இன்னோரு கவரும் இருந்தது. அவள் அந்த பேப்பரை படிக்கிறாள் அதில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று இருந்தது. மறுபக்கம் திருப்பி பார்த்தால் , அன்று கேட்டாய் என் பிறந்தநாள் அன்று உன்னால் என்ன வாங்கி தர முடியும் என்று , இந்த கிப்ட் பார்சலில் உள்ளது மோதிரம் இல்லை, புடவை இல்லை என்னால் முடிந்தது பிரித்து பார் நன்றாக உற்றுப்பார் என இருந்தது. உடனே பிரித்து பார்த்தால் அதில் ஒரு கண்ணாடி தான் இருந்தது உற்றுப் பார்த்தால். நோநோநோ என்று அந்த கண்ணாடியை தூக்கி போட்டால், எறிந்தால். மீண்டும் அந்த பேப்பரை படிக்கிறாள் அதில், என் ஆசை உன் முகத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் என்பதுதான் அது நடந்து விட்டது. ஆமாம் நீ கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் நான் உன்னை பார்ப்பேன் ஐ லவ் யூ தேவி என்று எழுதி இருந்தது .அவள் கண்ணாடியில் பார்த்து அழுதது அவளின் முகத்தை பார்த்து அல்ல அதில் தெரியும் அவளின் கண்களைப்பார்த்து ...... ஐ மிஸ் யூ டா ... என்று அழுது அவன் நினைவுகளோடு வாழ்கிறாள். .....

எழுதியவர் : பிரபுதேவா சுபா (27-Oct-16, 12:54 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
Tanglish : kaadhal
பார்வை : 485

மேலே