ஜனநாயகம்

அரசு அனுமதி பெற்ற!

#நவீன #பார் வசதி
உண்டு

கவரும் விளம்பரம்

அரசு அனுமதி பெற்ற...

அரசு அனுமதியா எதற்கு?

நவீன!

என்ன நவீனம்?

பார் வசதி உண்டு

எதை பார்க்க வசதி உண்டு?

விடை தேடி விழி அலைய!

என் முதல் கேள்விக்கு விடை

பதினோரு மணி இரவுக்கு
கிடைத்தது!

அரசு அனுமதி பெற்ற...

அர்த்தம் தெரிந்தது அதன்
உண்மையும் புரிந்தது.

"நவீன" ஆம் நவீன

முறையில் தான் அங்கே

விநியோகிக்கப்படுகின்றது.

"பார் வசதி உண்டு"

#பார்த்தேன்

நிஜமான நிஜம் பார்த்தேன்

இருபத்தி நாலு மணி நேரமும்
கிடைக்கும் வசதி

பார்(த்த) பின் தெரிந்தது.

சளைக்காமல் படையெடுக்கும்
#குடி#மகன்கள்

வாழ்க ஜனநாயகம்!

பாவம் #குடிமக்கள்!
#sof #சேகர்

எழுதியவர் : #sof #sekar (31-Oct-16, 4:33 pm)
Tanglish : jananayagam
பார்வை : 109

மேலே