ரசித்துப்பார்

நிலவு ஒழுகும் இரவில்...
இரவின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு ஒற்றையடிப் பாதையில்
சென்றதுண்டா?
மையிருட்டு கவிப் பாடும்
ராகம் கேட்டதுண்டா?
ரசித்துப்பார்..!
காற்றின் அலைவரிசையில்
கவி எழுதுவாய்..
எழுத்துகள் தாங்க
காகிதம் கேட்பாய்..
முற்றுப்புள்ளி வைக்க
மை தீர்ந்தால்
நட்சத்திரங்கள் திருடுவாய்..
நிலவின் இடைமறைக்க
மேகத்துண்டுகள் கேட்பாய்..
ரசித்துப்பார்!
நிலவு தொலைக்கா
இரவு கேட்பாய்..
இரவெனும் கூந்தல் அள்ளி
முடியாத வானமொன்று
கேட்பாய்..
ரசித்துப்பார்!
நான் சொட்டிய
இரசணைத் திரவம்
சிறியதென்பாய்.

எழுதியவர் : ஞானப் பிரகாசம். (5-Nov-16, 10:01 pm)
பார்வை : 355

மேலே