அழகு சிலை
மல்லிகை ஏங்குதடி
உன் கூந்தலில் குடிபுக
செவ்வானம் தரை வந்ததடி
உன் உதட்டோர சிவப்பை
குத்தகை கேட்க...
மைதீட்டிய உன் விழிகள்
புதுமொழி பேசுதடி
உன் புருவங்கள்
வானத்தில் கவிழ்ந்த மூன்றாம்பிறையடி...
காதோர உன் லோலாக்கு
புது நடனம் பயிலுதடி...
காந்தள் மலர் நானுதடி
உன் அழகிய விரல்களை கண்டு...
உன் நாசிக்கு
கவிஞர் உலகில்
புது உவமை ஏதடி
நீ ஐந்தடி உயரத்தில்
அலங்கரித்த அழகு தேரடி ...
பிரம்மா... நன்றி...
வியந்தேன் உன்
படைப்பை இவளை
பார்த்த பின்பு...