மோடித்தனமா பேச வேண்டாம்டா முட்டாள்

என்னடா பிரதமர் மோடி திடீர்னு ₹500/-

1000/- நோட்டுகள் செல்லாதுன்னு

எட்டாம் தேதி எட்டு

மணிக்கு அறிவிச்சு நடுத்தர மக்கள்

தலைல மண்ண அள்ளிப்

போட்டுட்டாரு.. எட்டுன்னா குட்டிச்

சுவருன்னு சொல்லுவாங்க

கிராமத்தில. மருந்து மாத்திர வாங்க

முடில. தொலைதூரப் பயணம்

போனவங்க பாதி வழில மாட்டிட்டு

முழிக்கறாங்க.

உணவகத்தில வழக்கமா சாப்படற

கன்னிப் பசங்களும் கன்னிப்

பொண்ணுங்களும்

பட்டினியாக்

கெடக்கறாங்களாம். மொபட்டுக்கு,

ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போடப்

போனா "ஐநூறுக்கு போட்டுக்க,

இல்லன்னா வண்டியத்


தள்ளிட்டு நடையக்கட்டு"ன்னு

சொல்லறாங்களாம். என்ன

அநியாயம்ண்டா இது. அறிவிச்சுட்டு

வழக்கம் போல வெளிநாட்டுக்குப்

போயிட்டாரு மோடி அய்யா.


@@@@@

மோடித்தனமா பேசாதடா முட்டாள்.

நான் மோடி அய்யாவோட பரம

ரசிகன்டா. அறுபது வயசக் கடந்தும்

எவ்வளவு சுறுசுறுப்பா செயல்படறாரு.

கருப்பு பணத்தைப்

பிடிக்கத்தாண்டா மோடி

வித்தையேல்லாம் செய்யறாரு எங்க

அய்யா. கொஞ்சம் நாளைக்கு இந்த

சின்னச் சின்ன இடையூறை எல்லாம்

பொறுத்துதுக்கடா மடப்பயலே.

எல்லாக் கருப்பு பணமும்

வசூலாயிட்டா வறுமைக்

கோட்டுக்குக் கீழ இருக்கறவங்ககூட

பல லட்சங்களுக்கு அதிபதி

ஆகிடுவாங்கடா முட்டாள். நானும்

நீயும் லட்சாதிபதிகள் ஆகற நாளு

நெருங்கிட்டு வருதுடா. தெனமும்

எங் கனவில அந்த 15 லட்சந்தாண்டா

வந்து பளிச் பளிச்சுன்னு மின்னிட்டு

மின்னிட்டு போகுது. 15 லட்சம்டா

15 லட்சம் ஞாபகத்திலெ வச்சுக்க.

இனிமே

இதுமாதிரி மோடித்தனமா நீ பேசினா

நா நரசிம்மர் உம்

மூஞ்சிமொகறக் கட்டையப்

பிடிச்சு நாரு நாராக் கிழிச்சுருவண்டா

பேடிப் பயலே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மோடி என்பதற்கு குஜராத் மொழியில் என்ன.அர்த்தம் என்பதை கூகுலில் பார்க்கவும்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
'மோடி' என்ற சொல் நமது செம்மொழியிலும் உண்டு.
மோடி = வேடிக்கை.(An unfriendly, frowning man)
மோடிப் புடவை = வெண்ணிற ஆடை.
இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றை 'மோடிச் செல்லம் இங்க வாடிச் செல்லம்' என்ற எனது படைப்பில் பார்க்கவும்.
நன்றி:
Winslow's A Comprehensive Tamil English Dictionary. Asian Educational Services, New Delhi, (Chennai), 1992. First Published 1862. பக்கம் 902.
################################
சிரிக்க அல்ல. சிந்திக்க. பழமையான தமிழ்ச் சொல்லின் பொருள் அறிய. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (11-Nov-16, 9:02 pm)
பார்வை : 205

மேலே