சாபமே வரமானது
![](https://eluthu.com/images/loading.gif)
கோபத்தால் மறந்தேன் நான்
என் காதலின் ஆழத்தை
வெளி வந்த வார்த்தைகளோ
சாபமாய் வரமானது என் வாழ்விலே..!
பிரிந்திருப்பேன் உன்னை
வார்த்தையின் வலிமை புரியாத நான்
விளையாட்டாய் கூறினேன் அன்று உன்னிடத்தில்.....!
காதல் கை கூடியே
திருமண வாழ்வைக் கடந்தும்
இணைந்தே வாழ வேண்டும் நாம்
உன் வெளிநாட்டு பயணமோ
பிரித்து விட்டது எம் காதல் வாழ்வை.!
காதலை வெறுக்கும் என் அன்னை சாபமோ அழிந்து விடுவாய் நீ
உன்னை வெறுக்கும் என் தந்தை
சாபமோ உன் காதல் நிலைக்காது
நானோ தினம் தினம் மிதக்கிறேன் கண்ணீரில்.....!
சாபமே வரமானது என் வாழ்வில்
காதலின் நம்பிக்கை உயிர் வாழ வைக்கிறது என்னை
உன் நினைவுகளே துணிவூட்டுகிறது இன்றும் எனக்கு....!
சி.பிருந்தா
மட்டக்களப்பு