நகைச்சுவை - கருப்பு பணம் ஒரு விஷ நாகம் --ராமு,சோமு உரையாடல்

சோமு : அண்ணே, ராமு அண்ணே , இது என்னங்க
ஐநூறு , ஆயிரம் பழைய நோட்டுகளை
அங்கீகாரம் செய்யலைன்னா கருப்பு பணம்
வெளிவரும்னு அரசாங்கம் நினைக்குது
இது சாத்தியமா அண்ணே ?


ராமு : டேய் சோமு ! அரசாங்க நடவெடுக்கை
சூப்பரோ சூப்பர்தான் ...............
ஆனா இந்த கருப்பு பணம் இருக்கே
அது ஒரு விஷ நாகம் போல . பல்ல பிடுங்கினா
ஒழிய ஒலிப்பது வெகு கஷ்டம் ;
இப்போ அரசாங்கம் இந்த பாம்புக்கு
மோடி ஊதுது, போக போக தெரியும்
அதன் பல்ல பிடுங்கி போட்டி உள்ள
அடைக்கரங்களா ................... இல்லை.......

சோமு : இப்போ புரியுதூங்க அண்ணே இந்த
கருப்பு பணம் விவகாரம் ......

ஆனா ஒன்னு புரியல அண்ணே ; அது தான்
அந்த பாம்பு பல்லுநீங்களா அது ..........

ராமு : அது வாடா மண்டு, அது தான் இந்த
கருப்பு பணக்காரங்க கை ஆளற
ட்ரிக்ஸ் ........... ஷாட்-கட்ஸ்....யுக்திகள்
அந்த பல்லுகளை (லூப்-ஹோல்ஸ்)
பிடுங்கிப்பூட்ட ,பாம்பு காலி ..........புரிஞ்சுதா

சோமு : இப்போ நல்ல புரியுது அண்ணே
ஹீ........ஹீ .............. ஹீ ......ஹீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-16, 5:09 am)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே