ஆரிய நாகரிகம் -- சிந்தனைக் களம் ---படித்தது ---படிக்க ,சிந்திக்க பகிர்க

வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்து சமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர் – மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன்மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

“தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

‘கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்‘ என்று எழுதினார்
“ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்கள் கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.”

“ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். ………………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்-,பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன. ……………………………………………..

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”


ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதன இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிநபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டுமொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது. இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைப்போல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள்.

ஆனால் இன்று “குடிப்பதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்துப் பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள்ள். .

நூல் வௌயீடு: அங்குசம்

தொடர்புக்கு:

ஞா. டார்வின் தாசன்

எழுதியவர் : (21-Nov-16, 4:09 pm)
பார்வை : 75

மேலே