விழிகளால் புரியாத உணர்வு

சிரித்துப் பேசி பெண்களைக் கவர்பவன்
உடல்களை கட்டாக வைத்து
பெண்களால் கவரப்படும் ஒருவன்
பெண்களிடம் பேசாமலேயே பேச்சளவில்
பெண்களைப் பற்றி அளந்துவிடும் ஒருவன்
இப்படிப் பலரும் என்னுடன் பகர்ந்தனர்
அவர்கள் செய்யும் ஏதோ ஒன்றைச் செய்து
எனக்குப் பிடித்தவளைக் கவரச்சொல்லி.
நகையாடினர் எழுதப்பட்டு எடுத்தியம்பாமல்
ஏடுகளில் உறங்கும் அவளது உணர்வுகளை.
எனது விழிகளால் அவளுக்கு எனது
உணர்வுகள் புரியவில்லை யென்றால்
அந்த எழுத்துக்கள் எந்தன்
ஏடுகளிலேயே உறங்கட்டும்.
எனது விழிகளுக்கு உணர்வுகளைப்
பகரத்தெரியவில்லையா? அல்லது
அவளது விழிகளுக்கு அவைகள் பகரும்
ஒன்றைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லையா?
அவளது விழிகளின் இசைவிற்காக காத்திருக்கிறேன்
எனது எழுத்துக்கள் அவள் உணர்வதையோ?
என்னுடனே உறங்குவதையோ?
ஏதோ ஒன்றை அவளது
விழிகளே முடிவு செய்யட்டும்