மௌன அணை

கொசுக்கள்
குடிக்க
என் குருதி
சூடாக
ஆனால்
இடப்பக்க
இதயம் மட்டும்
காலை பனியில்
கால்கள் சுருட்டுதடி
வாலாட்டி போல்

கோடை விரட்டும்
அடை மழை கூட
குடை பிடிக்க சொல்லி
கூதல் வேர்க்குதடி
ஊடல் உடைத்து
மௌன அணை
திறக்க
திறவுகோல் தேடடி

தொடுத்து அடுக்க
பூக்கள் ஈர்க்கும்
இந்த புவி
ஆசையாய்
உன் கூந்தல் சூட
பூக்களும் பூக்கும்
குழல் இசை
ஓசையாய்

காதல் கணக்கெடுப்பதில்லை
ஊடல் கூடலை
உளவுத்துறை
வைத்து

தாமதிக்காமல்
வருடி
வழியனுப்படி
உன் வீடு
மாடப் புறாவை
எனக்கான
நல்ல பதிலோடு

எழுதியவர் : S T வைரமுத்து (4-Dec-16, 8:23 am)
சேர்த்தது : VAIRAMUTHU ST
பார்வை : 109

மேலே