தமிழே நீ வாழ்க

கைச்சைகையே கருத்துகளுக்குக் கதியென இருந்த
காலமதில் எம்முன்னோர் களிப்புற நாவையசைத்துப்
பேசிடச் செய்தாயே - தமிழே நீ வாழ்க!

யாதும் ஊரே என்ற கணியனையும்
ஈடில்லா முப்பால் தந்த வள்ளுவனையும்
தமிழனாய்த்தந்தாயே - தமிழே நீ வளர்க!

ஆண்டவன் ஆசிபெற்று அறமென்றும் புறமென்றும்
வாழ்வையழகாக பகுத்தளித்து வந்தோரை எல்லாம்
வாழவைத்தாயே - தமிழே நின்புகழ் ஓங்குக!

-ரசீன் இக்பால்

எழுதியவர் : ரசீன் இக்பால் (12-Dec-16, 3:09 pm)
பார்வை : 1637

மேலே