எங்கே விவசாயிகள்

வருடந்தொறும் வருகிறது தேசிய
விவசாயிகள் பெருதினம்..
செய்தியும் வருகிறது விவசாயி
தற்கொலையென்று அனுதினம்..
அற்ப பணத்திற்காக சொற்ப
நிலம்தானே என்றெண்ண வேண்டா!
சிற்ப வியர்வைத்துளிகள் சிந்தி
உழைத்த விவசாயிதன் நிலமது!
பசிதீர்க்க அவதரித்த மாமனிதர்கள்
பட்டினியில் வாடக் காரணம்தான்
பணப்பசி கொண்ட உதவாகரைகள்
இன்னும் தேசத்தில் உலாவுவதால்!
வாழ வைக்கும் விவசாயியை
வாழ விடாமல் செய்துவிட்டு
வாழ்ந்திடலாம் நன்றிங்கு என்றெண்ணி
வாதாடித் திரிய வேண்டா!
கண்கண்ட ஊரெங்கும் விளைநிலங்களும்
காணோம் விவசாயமும் காணோம்
நாட்டில் விவசாயம் செழிக்கக்காணாதது
எந்தன் கண்செய்த குற்றமன்றோ?
உணர்க மக்கள்!
வாழ்க விவசாயி!
வளர்க விவசாயம்!
உயர்க பாரதம்!
- ரசீன் இக்பால்