என் புன்னகையே
ஒரே மொழியில் உலகம் பேசும்
பூமியெங்கும் வெளிச்சம் படரும்
இறக்கும் போதும் இதழின் ஓரம்
கரையும் நிலவே ..........
உன் சுவாசத்தில் பூமி உயிர்பிழைத்தது
உன் இருப்பிடம் சொர்க்கமானது,
மனிதனால் மட்டும் உணரமுடிந்த உன்னை
அவனால் உணரவைக்க முடியவில்லை
நீ பற்கள் தரும் அழகா??
இல்லை, மழலையும் மகிழ்கிறதே !
நீ இதழ்களின் கனவா??
இல்லை , உறக்கத்திலும் தொடர்கிறதே !
நட்பில் கலந்த நீ
பிறப்பில் உயிர்த்தாய்
இறப்பில் மறைவாய் .....
வாழ்வில் நான் தோயும் போதும்
தோள் தந்தது நீதான்
குறும்புகள் மீறும் போதும்
தப்பிப்பிழைக்க வைப்பதும் நீதான்
அணி பல அணிந்தும்
உடை பல பணிந்தும்
நீயின்றி நான் வறுமையே ....
என் புன்னகையே!!