செல்லரித்த காடு

செல்லரித்த காட்டுக்குள்ளே
ஆடு நனையுதென்று ஓநாய்கள் கூட்டமின்று கூடி இங்கே கத்துதேடி
மனிதமென்ற ஆடைகட்டு கூவமென்ற பொட்டுமிட்டு
வேடமென்ற கூந்தலிட்டு அன்ன நடை போடுதடி
நாட்டுக்குள்ளே கள்ளமிட்டு
வீட்டுக்குள்ளே கன்னமிட்டு
கொடையாளி போலெனவே
குவலாயம் பேசுதடி
உயிரோடு விளையாடி உறவாட எண்ணுதடி
உறவோடு உறவாடி உறவழிக்க பார்க்குதடி
பயிரான உயிரினிலும் உலை வைத்த கூட்டமிது
உயிரான காதலிலும் உலையாகி போகுதடி
வெள்ளை மன சோலைக்குள்ளே
வெறிதனமா பாயுதடி
வெட்டி முறித்திடவே வெறியாட்டம் ஆடுதடி
கள்ளமில்லா மனசுக்குள்ளே
கல்வியான சோலைக்குள்ளே விஷவிதையை தூவுதடி
கும்மிருட்டு நாடகமாய்
நாட்டதனை கும்மிருட்டாய் மாற்றிவிடும்
குள்ளநரி கூட்டமதை
கொலைவெறியாய் தாக்கிடவே
கோலவிழி மங்கையரே
சேவல் விழி கன்னியரே
சீறி இங்கே வந்திடடி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 10:17 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 56

மேலே