அக. யாழ் மகிழி -க்கு அப்பாவாகிய நான் அன்றைய திங்களொன்றின் காத்திருப்பில்

என்னவளின் வயிற்றினில்
ஏழு திங்களாய் குடிகொண்டு
வளர்பிறையாய் வளரும் என் மழலையே...!
பழரசம் பருகும் உன் அன்னையின் முகத்தினில்
நவரசமும் நாட்டியமாடுகிறதே...!
அவள் முனுமுனுக்கும் மெல்லிசைத் தாலாட்டு
உன் செவிகளுக்குக் கேட்கின்றதா...?
பிஞ்சுக் குழந்தைபோல
என் வஞ்சியவளின் மலர்முகம்...
அவளை வஞ்சிய வாய்களுக்கு
வாரிசாக நானிருக்கேன் எனக்கூறி...
எஞ்சியப் புன்னகையால்
அவள் செவிதனில் உரைக்கப்போகும் என் வாரிசே...!
நீ வரும் அத் திங்கள் நோக்கி
வரவேற்கத் தயாராய் காத்திருக்கிறேன்...
ஒரு சராசரி தந்தை போல...