காதலியே

நீஎன்னை கடந்து போகையிலே
நான் கரைந்து போனேனடி

உந்தன் வேல் விழிகளோ
என்னை கூறு செய்யுதடி

உந்தன் உதட்டுமை ஆக
எந்தன் உதிரம் துடிக்குதடி

உன் வட்ட முகமோ
என் வாட்டத்தை போக்குதடி

நிந்தன் கருமை கூந்தலோ
கார் மேகத்தை ஒத்ததடி

உன் சலங்கை ஒலியோ
எனக்கு சங்கீதம் ஆனதடி

நிந்தன் கடைகண் பார்வையிலே
யான் காலனையும் வெல்வேனடி

உன் கொஞ்சும் சிரிப்பினிலே
என்உள்ளம் கொள்ளை போனதடி

என் காதலை ஏற்றுக்கொண்டால்
உன்னை காவியம் ஆக்குவேனடி

நீ மறுதலித்தால்..........

காதலித்துப்பார் என்ற கவிஞரே
மறுதலித்த வேதனையா தென்றுரைப்பீரோ.....

எழுதியவர் : கலியபெருமாள்.கோ (3-Jan-17, 11:42 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : kathaliye
பார்வை : 99

மேலே