சுனாமி சுவடுகள்

கோபமும் குறையவில்லை ;
கொந்தளிக்குதே கடல் !
மாசுபட்ட மனிதன் மனதில் -
மாறுதலும் வருவதெப்போ ?

ஏச்சிப்பேச்சி ஏமாற்றுகிறாய் !
ஏளனம் செய்து எள்ளி நகைக்கிறாய் !
பொறுக்க முடியாத கடலும் -
பொங்கி யெழுகிறதே !

வேகத்தை அளவிட்டு -
விதவிதமாய் பெயர் வைக்கிறாய் !
விவரமின்றி இருந்துவிட்டாலோ -
வீதியிலே நிறுத்துகிறாய் !

சுனாமியின் சுவடுகளும் -
கரையினிலே காத்துக்கிடக்க !
அன்பை விதைத்து நீயும் -
அறுவடை செய்வதெப்போ?

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (7-Jan-17, 1:08 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 99

மேலே