ஓரவஞ்சனை

வள்ளுவன் காலத்து வழிவந்த வீரவிளையாட்டு – அதை
பள்ளத்தாக்கு பயங்கரவாதிபோல் பாவிப்பது கேலிகூத்து
கிள்ளுக்கீரையா தமிழ்நாடு, தாய்நாடே உனக்கு..?- அதை
எல்லாவகையிலும் வஞ்சிப்பது சீ வெட்கக்கேடு..!

காவிரியில் கைவிரித்து கையாலாகத்தனம் காட்டினாய்
கரன்சிநோட்டு அனுப்புவதில் ஓரவஞ்சனை காட்டினாய்
வங்கிகடன் முதலைகளுக்கு சலுகைகள காட்டினாய்-ஆனால்
விவசாய கடனாளிகளை மிரட்டிமிரட்டி பயம் காட்டினாய்.

இந்தியை திணித்து சந்ததிவளர்க்க வழிவகுத்தாய்
ஈழத்தமிழர் ஈரகுலை அறுத்து புளிஏப்பம் விட்டாய்
ஜல்லிக்கட்டின் கழுத்தைப்பிடித்து காவுகொடுத்தாய்
பொங்கல்விழாவின் விடுப்பை கெடுக்க தூபம்போட்டாய்

இருந்தவரும் இறந்துவிட்டாரென்ற இறுமாப்பா உனக்கு..?
இருப்பவரும் முடங்கிவிட்டாரென்ற மதமதப்பா உனக்கு..?
இருப்பவர்கள் எதிர்க்கமாட்டார்களென்ற நக்கலா உனக்கு.?
இறுமாந்து திரியாதே இனியெல்லாம் சறுக்கலே உனக்கு..!

வடக்குவாழ்ந்து தெற்குதேய்ந்த காலம் மாறிப்போனது
தெற்குவாழ வடக்குத்தேயும் காலம் உருவாகலானது
குட்டிக்கர்ணம் அடித்தாலும் செங்கோல் கனவுபலிக்காது
எட்டப்பர்களே எட்டேப்போங்கள் உங்கள் பருப்பு’வேகாது.

எழுதியவர் : சாய்மாறன் (15-Jan-17, 12:25 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 139

மேலே