வா வா என் வானம்பாடியே
ஏய் பெண்ணே பெண்ணே
என் காதல் கண்ணே
நீ என்ன அந்த வானம்பாடித்தானோ
அழகிய அந்த சிறு வானம்பாடித்தானோ
உயர உயர பரந்துச் செல்லும் அந்த
பாடும் பறவைதானோ நீ
மேலும் மேலும் உயர பறக்கும்
அந்த வானம்பாடி என்ன அந்த
வானத்தையே தொட்டுவிட
ஆசைப் படுவது போல்
என் உள் மனதை தொட்டுவிட
ஆசைப் படுகிறாயோ பெண்ணே
பறந்துவா என் பைங்கிளியே
அந்த வானபாடி போல் பறந்து வா
என் உள் மனதை தொட்டுப் பார்
அந்த கண்ணாடியில் நீ
உன்னைக் காண்பாய் ஆம் கண்ணே
நீ அல்லவோ அங்கு உறைகின்றாய்
அதை நீ ஏ அல்லவோ காண வேண்டும்
வா வா என் அழகு வானம்பாடியே