அன்புமணி

இவன்
திண்டிவனம்
கண்டெடுத்த நந்தவனம்
வன்னி இனம்
பெற்றெடுத்த சொந்தவனம்
போதை அழித்து
பாதை காட்ட வந்தவனம்
மருத்துவர் ஐயா
மகத்துவம் செய்யத் தந்தவனம்
இவன் பெருமைக்கு ஈடு
இங்கே எந்தவனம் ?


இப்பூவுலகில்
மனிதனாய்ப் பூத்த பூமணி
இவன் மனமோ இனிக்கும் பூ ஹனி
மண்ணில்
மாற்றம் ஏற்படுத்த வந்த மாமணி
இவன்தான் அன்புமணி

மது உடல்
நலத்திற்குக் கேடு
இது மக்களைக் காக்க
இவன் போட்டக் கோடு

அன்போடு வருவோர்க்கு
இவன் அன்புமணி
அம்போடு வருவோர்க்கு
இவன் அபாயமணி

வாய்ப்பு கிடைத்தால்
வேற்று கிரகத்திக்குக்கூட
செல்ல நினைத்த
மருத்துவர்களை
கட்டாயம் வெற்று கிராமத்திற்கு
வந்து செய்யவைத்தான் சேவை
இப்படி ஓர் மறத்தமிழன்
ஆட்சி பீடத்திற்கு
நிச்சயம் தேவை

வெற்றிப்பல கண்டபோதும்
இவன் கொண்டதில்லை மமதை
இவன்
போதையை அழிக்கப் பிறந்த மாமேதை

இவன் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கே ஏழைகள்
வேதனைத்தீயில் வேகுவரா
சோதனைத்தீயில் நோகுவாரா
ரோதனை நோயில் சாகுவாரா
இவன்
தமிழினம் காக்கப்
போராடப்பிறந்த இன்னொரு சேகுவேரா ..

எழுதியவர் : குமார் (4-Feb-17, 2:56 pm)
பார்வை : 379

மேலே