ஞாபகம் வருதே
![](https://eluthu.com/images/loading.gif)
பூத்து குலுங்கும்
பூக்களை கண்டால்
புன்னகை சிந்தும்
உன் முகத்தின் ஞாபகம்...
பசுமையான காட்சியை
கண்டால்
உன் பவ்யமான
பார்வை ஞாபகம்...
காற்றில் தவழும்
இளங்கொடியினை
கண்டால் நீ நடந்து
வரும் அழகின் ஞாபகம்...
புல்லின் மீது பனித்துளி
கண்டால் உன் காதுகளில்
மின்னும் தோடுகள் ஞாபகம்...
என் தோட்டத்தில்
அசைந்தாடும் ரோஜாவை
கண்டால் நீ சோம்பல்
முறிக்கும் அழகின் ஞாபகம்...
உன் மெல்லிய கொலுசொலியின்
சத்தத்தை கேட்டால் சப்தஸ்சுவரங்களின் ஞாபகம்...
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே
நாம் இணைந்திருந்த
காலங்கள் எல்லாம்
ஞாபகம் வருதே
என்னை உனக்கு ஞாபகம் இருக்கா...?