உயிர்களை நேசி - புதுக்கவிதை

தாயுடன் சேயும்
தாங்கிய வனத்தில்
தங்கிடும் உயிர்கள்
தரமிகு காடாம் .!


அன்பெனும் பாலம்
அமைத்தது நெறியை .
அமைதியின் ஊற்றாய்
அடங்குமே அகிலம் .!


வாழ்கின்ற உயிர்களை
வன்கொலை செய்திடும்
வனத்தை அழித்திடும்
வதைக்கும் மனிதர்கள் .!


காடுவாழ் விலங்கின்
கண்ணியம் கூட
நாடுவாழ் மனிதர்
நம்மிடம் இல்லை .!


பாசமும் பந்தமும்
பாரினில் ஒன்றே .
பழகும் விதத்தில்
பண்புடன் இருப்பாய் !


பிரிவினை வேண்டாம்
பேதமும் வேண்டாம்
உன்னைப்போல உயிர்களை
எண்ணி வாழ்ந்தால்
ஏற்றம் பெறுவாய் !!!



ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Feb-17, 4:11 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 175

மேலே