இதுதான் உலகம்

ஒரு பிள்ளைக்கு ரெண்டு தாய்
அதில் ஒன்று பொய்தாய்
ஒரு கனவுக்கு இரு தூக்கம்
அதில் ஒன்று பாசாங்கு தூக்கம்
ஒரு மனதுக்குள் இரு ஆசை
அதில் ஒன்று பேராசை
ஒரு உறைக்கு ரெண்டு கத்தி
அதில் ஒன்று அட்டகத்தி
ஒரு வானத்துக்கு இருநிலா
அதில் ஒன்று கருநிலா
ஒரு மேடைக்கு இரு நாடகம்
அதில் ஒன்று கபட நாடகம்
ஒரு பாதையில் இரு பயணம்
அதில் ஒன்று சிறுபயணம்
இன்று ஒரு கட்சிக்குள்
இரு ஆட்சி மக்கள் மனசாட்சிபடி
நடந்தால் அதுவே நல்லாட்சி...

எழுதியவர் : செல்வமுத்து.M (10-Feb-17, 10:24 am)
Tanglish : ithuthaan ulakam
பார்வை : 163

மேலே