பிடிக்குதே பிடிக்குதே

புயல் வீசினாலும்
பறந்து போகாத
இறகைப் பிடிக்கும்

மழையடித்தாலும்
கரைந்து போகாத
உப்பைப் பிடிக்கும்

தீயின் நாக்கில்
எரிந்து போகாத
பஞ்சைப் பிடிக்கும்

சூரியன் வந்தாலும்
மறைந்து போகாத
விண்மீன் பிடிக்கும

சுழலில் சென்றாலும்
கவிழ்ந்து போகாத
படகைப் பிடிக்கும்

புதைத்து வைத்தாலும்
மட்கிப் போகாத
விதையைப் பிடிக்கும்

மின்னல் ஆசையில்
பார்வை இழக்காத
கண்கள் பிடிக்கும்

வெள்ளம் வந்தாலும்
கரையை மீறாத
அலையைப் பிடிக்கும்

துன்பம் வந்தாலும்
சோர்ந்து போகாத
உள்ளம் பிடிக்கும்

மரணம் வந்தாலும்
விலக நினைக்காத
நேசம் பிடிக்கும் !

** மதிபாலன் **

எழுதியவர் : மதிபாலன் (11-Feb-17, 3:04 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 147

மேலே