காதல் கவி

கையில் ரோஜா
இடம் மாறுகிறது
இதழ் அறையில்..!
பூவாசம் மலர்கிறது
இதய அறையில்...!
சுவாசிக்கிறது காதல்
நம் உயிர் ரேகையில்...!

இன்றைய புலம்பல்
உனக்கு காதலா...?
உன் புலம்பல்
எனக்கு கவிதையா..?
இடம் மாறி துடிக்கும்
❤இதயம்❤

இமைகளில் உறங்கும் சுமைகள்
தொடர்கிறது மூச்சுக்காற்றில்
கலந்த என் மூச்சு...!
நகர்கிறது வாழ்க்கை மெல்ல
காதல் சக்கரத்தில்...!

உறைந்த இடத்தில் மறைந்து
வாழும் கவி காதல் நாயகன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (15-Feb-17, 10:49 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : kaadhal kavi
பார்வை : 195

மேலே