எல்லாம் நல்லதற்கே
காலை வேளை தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருந்தது எவரும் எடுத்த பாடில்லை ...
நிஷா ...நிஷா ...
போனே எடுத்து அன்செர் பண்ணுமா ...
எவ்வளவு நேரமா ரின்காகுது ...
அம்மாவின் குரல் கேட்டு ஓடி வந்து
ஹலோ .. யாருங்க ..
அடுத்த நொடி போனிலிருந்து இது நிஷா மேடம் தானே .. நாங்க சித்ரா கொல்லெட்ஜ்ல இருந்து கதைக்கிறம் ..
ஆ சரி ..
நான் கண்டிப்பா இன்னிக்கி வருவேன் .
நீங்க மற்ற ஏற்டபாடுகளை பாருங்க ..
என்று சொல்லி வைத்துவிட்டு அறைக்கு சென்றாள் நிஷா .
அழைப்பிதழினை பார்க்கலாம் என எண்ணி பீரோவை திறந்தாள் ...
அவளது பழைய டயரி எட்டிப்பார்த்தது .
மெதுவாக பக்கங்களை பிரட்ட அவள் நினைவுகள் சில வருடங்களுக்கு முன் நீந்திச்சென்றது ..
அப்போ அவள் பத்தாம் வகுப்பில் படுத்துக்கொண்டிருந்தாள்.. தந்தையும் தாயும் ஆசிரியர் என்ற படியால் இவளும் படிப்பில் கெட்டிக்காரியாய்த்தான் இருந்தாள்..
ஆனால் என்ன பருவத்தின் மாயைகள் இவளையும் விட்டு வைக்கவில்லை ..
பதினைந்து வயதேயான நிஷா அழகு தேவைதையாய் இருக்க பள்ளியில் படிக்கும் தினேஷ் என்பவன் இவளை ஒருதலையாய் காதலித்தான் ..
நிஷாவோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை .. அப்படியிருக்க ஒருநாள் நிஷா தெருவில் நடந்து செல்லும்போது
என்னடி ..நிஷா இப்படி பண்ற ?
என்ன புரிஞ்சுக்கெவே மாட்டிய
என்றான் தினேஷ் ..
சற்று பயந்த நிஷா
இங்கபாருங்க நாங்க இப்ப படிக்கிற வயசுல இருக்கோம் .. அதால இது தப்பு விட்டுடுங்க .. என்று சொல்லி விட்டு சென்றுவிட்டாள் ..
ஆனால் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட ஒருவர் நிஷாவின் தந்தையிடம் சொல்லிவிட்டார் ..
நிஷாவின் தந்தை கோபமாய் வந்து
நிஷா உடனே திங்ஸ் எல்லாம் ரெடி பண்ணு ..நாளைக்கு ஹாஸ்டல்ல விடப்போறேன் ..
அப்பா ..ஏன்பா..?
நிஷா அப்டியே உடைத்து போனாள் ஏன்னா அவ அப்பாவுக்கு கவ்ரம் தான் முக்கியம்னு அவளுக்கு தெரியும் .
அம்மாவும் எப்பவும் அப்பா சொல்றது சரின்னு நினைப்ப ..
தப்பே பண்ணாம தண்டிக்கிறாங்களே என்று அழுதாள் ..
பிறகு எல்லாம் நல்லதற்கே என்றெண்ணி ஹாஸ்டல் செல்லத்தயாரானாள்..
நிஷா இன்னும் ரெடியாகலயா..
திடுக்கிட்டுத் திரும்பினாள் நிஷா ..
ஆம் இன்று நிஷா ஒரு கலக்டெர் ..
சித்திரா கல்லூரி விழாவுக்கு அழைக்கப்பட்டாள் ..
அதுவும் அக்கல்லுரியின் முதல்வர் வேறு யாருமல்ல பத்தாம் வகுப்பில் படித்த தினேஷ் தான் ..
தினேஷ் நிஷாவை பார்க்க சங்கடப்பட்டதாலே பல முறை அழைத்து பார்த்தனர் .. நிஷா
அன்று நாம் பேசியது என்னை என் குடும்பத்திலிருந்து துரமாகியது ..
ஆனால் இன்று அதுவும் நல்லதேர்ட்கென்றே புரிகிறது ..
டிரைவர் கார எடுப்பா ..
என்று சொல்ல கார் வேகமாய் பறந்தது சித்ரா காலெஜ்ற்கு .....