காதலுக்கே தகும்

உன்னழகின் வெப்பத்தில்
என்னுதிரம் ஓடி மோதி
தகர்த்தது இதையக்கதவை
உளி தந்த வலிகளுக்கு
நன்றி சொல்லும் சிலையென
நீ தந்த வலிகளுக்கு
காதல் சொல்லுகிறேன்
சீறும் மொழியை
மீறும் உன் மௌனம்
ஒதுக்க பட்டாலும்
ஒடுக்க பட்டாலும்
உன்னையே தேடும்
என் மனம்
நொறுங்கிய இதயமும்
நெருங்கும் நொடிக்காய்
காத்திருப்பது
காதலுக்கே தகும்