மழையும் விவசாயமும்
வருவாயா என யோசித்து இருந்த காலங்கள்....
வருவேன் என நம்பிக்கை கொடுத்த நாட்கள்....
வரமாட்டேன் என கூறி, வந்த நாட்கள்....
வந்துவிட்டு, வந்துவிட்டேன் என கூறிய அந்த அதிசய நாட்கள்....
வருவேன் என கூறி வந்து என்னுடன் இருந்து காலத்தையும் என்னையும் கழித்த நாட்கள்..
பிறகு, வரமாட்டேன் என கூறி வராமாலே சென்ற நாட்கள்....
வருவாயோ என வந்து உனக்காக காத்திருந்த நாட்கள்....
வந்துவிடுவாய் என நினைத்து அமர்ந்திருந்த நாட்கள்...
வந்துவிட்டாய் என கற்பனையில் உன்னோடு பேசிய நாட்கள்....
முன் பொய் சொல்லி வந்தது போல் வந்துவிடுவாயா என காத்திருந்த நாட்கள்....
ஒரு முறையாவது வந்து விடுவாய் என நம்பிக்கையுடன் இருந்த நாட்கள்....
வர மாட்டாய் என நம்பத்தொடங்கிய நாட்கள்....
வரவேமாட்டாய் என என்னை நானே சமாதான படுத்திய நாட்கள்...
வரவில்லை என எனக்கு நானே சொல்லி ஆசுவாசப்படுத்திய நாட்கள்....
வரவேமாட்டாய், வந்தாலும் இனி பிரயோஜனம் இல்லை என நம்ப தொடங்கிய நாட்கள்....
கடைசி வரை வரவே இல்லயே....
நீ வரவில்லை என்றால் என்ன, நான் போகிறேன்....
வரவேண்டியது - மழை
போனது - பயிர்களின் உயிர் மட்டுமல்ல...
விவசாயின் உயிரும் கூடத்தான்....

