இணையம்

​இதயங்களை இணைந்திட உதவிடும்
--அறிந்தவர் அறியாதவர் சேருமிடம் !
முகவரியறியா முகங்கள் அறிமுகம்
--எண்ணத்தில் எழுபவை பதியுமிடம் !

நிகழ்வுகள் தெரியும் நிலைக்கண்ணாடி
--உலகைக் காணலாம் நம்முன்னாடி !
இன்பமும் துன்பமும் பகிர்ந்திடலாம்
--சாதிமதமிலா அதிசய இணையமிது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Feb-17, 9:48 pm)
பார்வை : 193

மேலே