பல்வலியா இயற்கையா ஏதோ ஒன்று
கொடிதிலும் கொடிது
பல் வலி தான் .....
பல்லில் இருந்து ஆரம்பித்து
நரம்பை புடைத்தெடுக்கும் வலி
நரக வலி
நிற்க விடாமல் அழவைக்கும்
இதற்கு வயது வித்தியாசம் கிடையாது
எல்லோரையும் அழவைக்கும்
பசி எடுத்தாலும் சாப்பிட விடாது .....
வலியின் கோரப்பிடியோடு சேர்த்து
மருந்து வாடை
வெயிலின் தாக்கம்
அன்னம் தண்ணீர் இறங்காமல்
மயங்கி விழ வைக்கும்
பகலில் வலியைக் காட்டிலும்
இரவில் தூங்க விடாமல் செய்து
மனிதனை உயிரோடு உயிரை எடுக்கும்
பல் வலி தான் உலகில் மிகப் பெரிய வலி
இதற்கு அரசன் ஆண்டி
சிறியர் பெரியவர்
வித்தியாசம் தெரியாது
எல்லோரையும் துடிக்க வைக்கும்
இப்படி கொடுமையான வலியும்
அடுத்த நாளில் இல்லாமல் போகும்
அது தான் கால நேரம்
எல்லா தருணமும் நேரத்தின் கையில் தான் .....
அந்த எல்லா நேரமும் நேரத்தோடு நேரமாய் உடன் இருப்பது குடும்பம்
இங்கே பல் வலி எப்பொழுதும் கொடிது ...
அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது
உப்பிட்டலும் மருந்தும் நேரமும் முடிந்தால் வலியும் போய்விடும் .....
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எது நடக்குதோ
அது நன்மைக்கே
கீதாச்சாரம் தான்
வாழ்க்கையிலும் ஒரு கட்டத்துல இருந்து இன்னொரு கட்டத்துக்கு போகறதுபெரிய வரம்
மனிதன் யாவரும் அதை துன்பம் என்று நினைக்கிறான்..
இப்பொழுது ஊரை சுத்திப்பாக்க போனா அதே ஊர்ல இருக்கறதுல என்ன சுவாரஸ்யம்
நிறைய இடங்களுக்கு போவது நிறைய பார்ப்பதே சுவாரஸ்யம் ...
வாழ்வின் சுவாரஸ்யம் ...
பள்ளி
பள்ளி முடித்ததும் கல்லூரி
நிறைய தெரிந்து கொள்கிறோம்
வாழ்வில் எல்லாமே பயணம் தான்
ஒவ்வொருவரின் பயணம்
என் பயணம் ....
அதில் நான் மட்டுமே....
நான் நானாக ....
எனக்கே எனக்காக
எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்....பார்க்கிறேன் ...ரசிக்கிறேன் ....
அடையாளத்தை விடக் கூடாது...
நீ நீயாக வாழ்.....
வாழ்க்கை ஒரு பயணம்
என் பயணம்
எனக்கான பயணம்
நான் அதை ரசித்து பயணிக்கிறேன்
அதில் வரும் யாவையும் ரசிக்கிறேன்
பள்ளத்தில் வரும் பனியும்
மேட்டில் மிதிக்கும் மிதிவண்டியும்
வெயிலில் தெரியும் கானல் நீரும்
அருவியில் கொட்டும் நீரும்
அந்த நீரில் ஆடும் என்னையும்
என்னோடு இணைந்திருக்கும் இந்த இயற்கையையும்
ரசிக்கிறேன் ......
நான் நானாக தென்றலோடும் புயலோடும் மகிழ்ச்சியாக பயணிக்கையில்
அதில் பார்க்கும் இந்த இயற்கை
தாயின் வருடல் தான் .....
இயற்கை வாழும் வரை உலகம் வாழும்...
உலகில் நான் நானாக வாழ்கிறேன் ஒவ்வொரு நொடியும் .....
எதற்காகவும் வருந்துவதில்லை ...
யாருக்காவும் என்னை மாற்றியதில்லை
எப்பொழுதும் இயற்கையை அதன் இசையை ரசிக்கும் இயற்கையின் சேய் ...