ஒரு பக்கக் காதல் கதை பாகம் -20

அவள் கூறிய பதில்கள் கூராயுதமாய் குத்திக்கிழிக்க ..அலைபேசி எடுத்து செயலியில் பயணத்தை முன்பதிவு செய்தான்..சில நிமிடங்களில் வந்தது..பாவம் எந்த சவாரியும் இன்று முதல் கிடைக்கவில்லை போலும்..

ஓட்டுநர் : சார் எங்க போனும்?

அவன்: உங்களுக்கு எங்க தோணுதோ ஒரு மணி நேரத்துக்கு நிறுத்தாம போங்க

ஓட்டுநர்: என்ன தம்பி...என் முதலாளிக்கு பதில் சொல்லணும்..

அவன்: நேரா போங்க..போதும்

ஓட்டுநர்: என்ன தம்பி ஏதும் பிரச்னையா?

அவன்: அமாம் நா..எனக்கு ஒரு பொண்ணுமேல விருப்பம் ஏற்பட்டது..அது காதலா இருக்குமோன்னு சந்தேகம் வந்துது..அந்த பொண்ணுகூட பழகிப்பாத்தேன்..ரொம்ப புடிச்சிருந்தது..அவகூட ரொம்ப நாள் வாழனும்னு மனசு கேக்குது..ஆனா...

ஓட்டுநர்: அந்த பொண்ணு ஒத்துக்க மாட்டேங்குறா அதானே?

அவன்: இல்லநா அந்த பொண்ணு ஒத்துக்குறதும் ஒத்துக்காததும் வேற...அனா இந்த ரெண்டுக்குள்ள அடங்க மறுக்குறா...அதுதான் எனக்கு புரியவே இல்ல

ஓட்டுநர்: தம்பி உனக்கு அந்த பொண்ணுமேல இருக்குறது காதலா?

அவன்: எது காதல்னு சொல்லுவீங்க ?

ஓட்டுநர்: என்னோட அனுபவத்துல..சொன்னா..பிரேக் மாதிரி ஒரு பொண்ணு நம்ம வாழ்க்கைல முக்கியமான அந்த உணர்வு..அது தான்

அவன்: எனக்கு அவ்வளவு முக்கியமா தெரில..ஆனாலும் ஒரு ஈர்ப்பு..

ஓட்டுநர் : அது வயசு..காசு..பொறுப்பின்மைனு..நிறைய பேர் இருக்கு..

அவன் : இதே தான் அவளும் ...

ஓட்டுநர்: தம்பி உன்னைப்பாத்த படிச்சவன் மாதிரி இருக்கு..உனக்குன்னு வேலை இருக்கும்..பொறுப்பு இருக்கும்..பொறுப்பில்லாதவங்களுக்கு..பொழைப்பில்லாதவங்களுக்கும் தான் இந்த விளையாட்டெல்லாம்..மறந்துட்டு வேற வேலைய பாருபா...

அவன்: மறதி..நினைவு..ரெண்டுமே நமக்கு வேணும்ங்கிறப்போ வர்றதில்லை..

ஓட்டுநர்: ரொம்ப நல்ல பொண்ணோ?

அவன்: உங்க பொண்ணு மாத்ரினா..

ஓட்டுநர்: கொஞ்சம் முயற்சிப்பன்னு..எதுலையுமே விடா முயற்சி வேணும்ல..இவ்வளவு பேசிட்டோம் உம்பேரு தெரியலையேபா..?


அவன்: கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க நா..

எனக்கூறி சட்டென இறங்கி கடற்கரை மணலை கடந்து சென்றான்..அவனது வழிப்பாதை தனியாய் தெரிந்தது அந்த ஓட்டுனருக்கு..

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (24-Feb-17, 7:20 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 279

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே