புரட்சி மங்கையரே புறப்படுங்களம்மா

பகுத்தறிவென்றால் என்னவென்று தெரியாமல் பரிதவிக்கும் மனிதக் கூட்டமம்மா....
சில நூல்களைப் படித்துவிட்டே தாங்களே அறிவாளியென்று மார்தட்டுதம்மா....

மனிதமென்றால் என்னவென்று மனிதர்களிடம் கேட்டால்
ஏதோ சித்தாந்த நூலைப் படியுங்களென்றே அறிவுரை சொல்லுதம்மா....
தன்னைத் தானே தனது சிந்தை வழியே அறியாமல் நூல்களைப் படித்து பயனேதம்மா??.....

தன்னுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களை அறிஞர்களென்று எப்படி ஏற்றுக் கொள்ளுவதம்மா?....

அழகின் ஆராதனை ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டதெனக் கூறியே பெண்களின் துகிலுரித்துப் பார்க்குதம்மா....
காமமே தலைமுழுவதும் ஏறியதாலேயே சிறு பெண் குழந்தைகளைக் கூடவிட்டு வைப்பதில்லையம்மா.....

மொழியே அறிவென்கிறார்களம்மா...
மொழி பேசும் அனைவரும் அறிவாளிகளாக இருப்பதில்லையம்மா.....

போதையின் பாதையிலே பயணிக்குதம்மா இந்த உலகம்....

கொலைகளும் தொடருதம்மா....
பொய்களே பரப்புதம்மா....

யார் யாரையோ பழி வாங்க, சமந்தமில்லா யார் யாரையோ கொல்லுதம்மா....

தன்னைத் தானே உலகம் சுற்றுவதாலே தான் உலகில் புவிஈர்ப்பு விசை செயல்படுதம்மா....
இல்லையெனில் இவர்களெல்லாம் இவ்வளவு ஆட்டம் போட முடியுமா???.....

இன்னும் என்னம்மா வேடிக்கை?....
உன்னை நீயே அறிந்து கொள்ளம்மா....
பகுத்தறிவிற்கு ஆகாத பழக்கத்தையெல்லாம் அடியோடு விட்டுவிடம்மா....

உனக்கு தடைகளேதம்மா....
பிரபஞ்சத்தின் பேராற்றலே நீயம்மா.....

உன்னை அடக்க எண்ணுவோருக்கு அறிவாலே புத்திபுகட்டம்மா.....

புதியதோர் உலகம் செய்வதற்கே புரட்சி மங்கையரே புறப்படுங்களம்மா.....
செய்ய முடியாதென்பதை எல்லாம் செய்து முடித்தே காட்டுவோமம்மா......

(இங்கு அம்மா என்னும் வார்த்தை அனைத்துப் பெண்களையும் குறிக்கும்.)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Feb-17, 8:07 pm)
பார்வை : 550

மேலே