கலியுக முக்தி

போகனுக்கும் போக்கிட முண்டு
மூலனுக்கும் முக்தி யுண்டு
நாதநாமம் நமச்சிவாய மிருக்கையில்
போக்கிட மேதுக்கடி பெண்ணே
முக்தியு மேதுக்கடி போதுமடி
நீசிவம் ஆவதற்கு பசித்த
வயிரினிக் கொருவா வன்னம்
ஊட்டலே அர்த்தநா ரீசுவரியே (ஞானப் பெண்ணே )!
_____________________________________________________________________________________________
நீதி:

பெண்ணை துறப்பது முக்தி அன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துதலே சிவம். சிவமே முக்தி.
_____________________________________________________________________________________________
பொருள் விளக்கம்:

போகர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள் அனைவரும் நமச்சிவாய நாமத்தை
அனுதினமும் நெஞ்சினுள் நிறுத்தி தெளிந்த அறிவினை பெற்றனர். இந்த கலியுகத்தில்
நாம் இறைவனை தம்முள் நிறுத்துவதற்கு செய்ய வேண்டியது யாதெனில் பசியென்று
தவிப்போர்க்கு இயன்ற அளவு அதாவது ஒரு கைப்பிடி சாதமாவது புகட்டல் வேண்டும்
அறிவுடைய பெண்ணே.
_____________________________________________________________________________________________
குறிப்பு:

இங்கு பெண்ணை அர்த்த நாரீஸ்வரி என அழைத்தமைக்கு காரணம் "சிவன் முழு ஆண் வடிவம்
கொண்டவர். அவரை எவ்வாறு பெண்ணினுள் வரவழைப்பது? பெண்ணினுள் வந்த பின்னர்
அவர் கொண்ட வடிவம் அர்த்தநாரீசுவரர். ஆகையால் பெண் அர்த்த நாரீஸ்வரி ஆனாள்." எனக் கொள்க.

எழுதியவர் : ரா அருள்மணி (1-Mar-17, 3:31 pm)
சேர்த்தது : R Arulmani
Tanglish : kaliyuga mukthi
பார்வை : 203

மேலே