காதல் என்பது
காதலுக்கு முடிவேது?
திருமணமா என்றால்
இல்லை இல்லை;
காதலுக்கேது முடிவு
அது முடிவில்லா ஓர்
தொடர்கதை அதில்
திருமணம் என்பது
ஒரு பகுதியே
காதலுக்கு அது ஓர்
அங்கீகாரம் அவ்வளவே
படிப்பிற்கு பட்டம் ஒரு
அங்கீகாரம் போல
கற்பதும் கல்வியும்
கூட தொடர்கதைதானே
உயிருள்ளவரை இரு
மனதை ஒரு மனதாக்கும்
மாயம் காதல்