என்னவளே
என்னவளே !
சிரிப்புக்குள் அமிர்தம் குழைத்து
அள்ளித் தெளிக்கிறாய்
முத்தங்களுக்கு
முகவரி தந்து முகத்திரை
கிழிக்கிறாய்
என் மனதைக் குழைத்து
குலவி
உடைத்துப் புகுந்து
உதைத்து நிமிர்த்தி
வளியும் விழியும்
இடை புகா
மேடை சமைத்து
உன்னை இருத்தி
என்னை உன்னில்
மட்டுமே காணும்
விம்பம் சமைக்கிறாய்
மனதின் மையம் தொட்டு மையலின் உச்சிமுகம்
உரசும் எண்ணம்
விதைக்கிறாய்
நெரிசல் இல்லாத
தெருவில் உரசி
மேனிக்குள்
மின்சாரம் பாய்ச்சுகிறாய்!
என்
அகமும் புறமும்
உசுப்பி உசுப்பி
நான் திக்குமுக்காட
என்னை அக்கு வேறாக்கி
ஆணி புறமாக்கி
உள் நுழைந்து
உதிரம் தசை எங்கும்
பிரி படாமல் பிணைந்து
கிடக்கிறாய் !
சகீ ! நீ என்
இதய யாழினி !
உதய மோகினி !
ஆக்கம்
அஷ்றப் அலி