மதுரப் புதுமை

ஈச்சையில் இத்தனை விதங்களா ?
இனிமையில் இத்தனை வகைகளா?
மதுரத் தோற்றத்தின் மகிமை பன்முகமா?

இது நெஞ்சை தொடும் அற்புதம் !
நினைவை கொள்ளையிடும் புதுமை!
கண்களைக் கெளவும் அருமை!
மனதைச் சுண்டும் திறமை !

கொண்டேன் ஆச்சர்யம்!
பழரசத்தில் தேன் குழைத்து
பலாச்சுளையை அதிலமிழ்த்தி
உண்ணும்சுகம் தரும்
பழமல்லவா இது !

அன்று !
பண்டைய அரபியின்
தேகப்பலக் கைங்கர்யத்தில்
இப் பழத்தின் பங்கு பிரதானம்!
இதன் இனிமை அது எப்போதும் தனிமை !
அதற்கு ஒருபோதுமிலை ஒவ்வாமை !

வல்ல இறையின் ஆற்றலுக்கு
வகை தொகை ஏதும் உண்டோ !
நம் கற்பனை வரையறை !
அவனதுக்கேது வரையறை!
அது நிகர் ஏதுமிலா
பிரமாண்டச் செழிப்பறை !

ஈத்தையோ சிறு பழம் !
பருமன் ஒன்று ! அளவும் ஒன்று !
உருவம் ஒன்று! ஒவ்வுகை ஒன்று!
ஆனால் காண்கிறோம் வேறுபாடு
ஒன்றல்ல !
ஓவ்வாமை 38 விதங்களில் !
இது எவ்வாறு !

நெஞ்சைப்புரட்டி மூளையை உருட்டி
கணனியின் விசையை எக்குத்தப்பாய்
துவைத்தாலும் வருவதோ வெறுமை !
இது விடை காணாத சூன்யப் புதுமை!

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : (6-Mar-17, 4:41 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 60

மேலே