காதல்நெறி தவறாதே மனமே
பிறரைப் பற்றி நாவடக்கமில்லாமல் விமர்சித்து மகிழ்வோர், தன்னை மற்றவர் நாவடக்கமில்லாமல் விமர்சிக்கும் போது மட்டும் கோபங் கொள்கிறார்களே....
தனக்குத் துன்பம் வந்தால் துவண்டு அழுவதும், இன்பம் வந்தால் மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதிப்பதும் சுயநலத்தின் வெளிப்பாடாகுமே....
காதலில் ஆண்கள், பெண்கள் இருவருமே சரிசமக் குற்றவாளிகளென்ற போதிலும் அதில் பெரும் பங்கு பெற்றோர்களையே சாருமே....
குப்பைகளால் நிரம்பிய மனிதர்களின் காதல் நெறி கண்டு கண்ணீர் விடுவதை வேறென்ன செய்வது???...
காதலின் நோக்கம் உடல் சுகத்தை மட்டுமே வேண்டுவதென்றால்,
காதலித்து எல்லாம் முடித்தப் பிறகு வேறு காதல் தேடிச் செல்வதும் விபச்சாரம் எனப்படுமே...
இல்லறம் தவறி வாழ்பவர்கள் போல் காதலறம் தவறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் இளைஞி மற்றும் இளைஞர்களே, மனம் திருந்துங்களே....
வாழ்க்கையில் நல்லறங்களைப் பின்பற்றுங்களே....
நிறைவு பெறாத மனம் தன்னில் நிம்மதி என்பது என்றுமில்லையே....
மனமென்னும் ஆயுதத்தை நல்வழியில் திசை திருப்பாவிடில், வாழ்வில் சந்தோஷமென்பதும் என்றுமில்லையே....
குற்றமில்லா உணர்வுகளை மட்டுமே இயற்கையும் ஏற்குமே....
குற்றமே உணர்வானால் இயற்கையே விஷமாகுமே.....
மிரட்டுவதற்காகக் கூறவில்லை...
தற்போது எதை இன்பமென்று நம்பி அதில் மூழ்குகிறீர்களோ,
அதையே பாழடைந்த கொடிய நரகமென்று பின்னாளில் உணர்வீர்கள்....
அன்று நிச்சயமாக வருந்துவீர்கள்.....