கடலை கவிஞர் இரா இரவி
கடலை ! கவிஞர் இரா .இரவி !
உடைக்காமல் அவித்தால்
ஒரு ருசி !
உடைத்து அவித்தால்
ஒரு ருசி !
உடைக்காமல் வறுத்தால்
ஒரு ருசி !
உடைத்து வறுத்தால்
ஒரு ருசி !
ஒவ்வொன்றும் ஒரு ருசி !
அதனால்தான்
ருசியான காதல் உரையாடலை
கடலை போடுதல் என்றனரோ ?