காண்பேனோ

விடியும் இரவுப் பொழுதாய்
முடிகின்றது
இருந்த பொழுதுகள்
இனிமேல் நினைக்கும் பொழுதாய் மாறிடுமோ?...
மழையின் புன்னகை மண்ணில்
காண்பேனோ?...
பசுமையின் சாரல் வயல்வெளிகளில்
காண்பேனோ?...
வாடும் உழவனின் உயிர் வாழ காண்பேனோ?...
வறுமை இல்லா உலகை
காண்பேனோ?...
எங்கள் கண்ணீர் ஆனந்தத்தில்
காண்பேனோ?...