அவனும் அவளும்
அவளும் நானும்
தமிழும் சுவையும்
அவளும் நானும்
கரும்பும் கனியும்
நிலமும் மழையும்
இணையும் தருணம்
பயிரும் உழவும்
செழிக்கும் வளமும்
அவளும் நானும்
தமிழும் சுவையும்
அவளும் நானும்
கரும்பும் கனியும்
காற்றும் கிளையும்
அசையும் கொடியும்
இலையும் பூவும்
உரசும் பொழுதும்
அவளும் நானும்
தமிழும் சுவையும்
அவளும் நானும்
கரும்பும் கனியும்
நேற்றும் இன்றும்
புலரும் பொழுதும்
மறையும் இரவும்
இனியும் இணைவோம்
பிரியோம் சேர்வோம்
அவளும் நானும்
தமிழும் சுவையும்
அவளும் நானும்
கரும்பும் கனியும்
கவியும் சுவையும்
உயிரும் மெய்யும்
மரபும் தளையும்
இணையும் பாவும்
அவளும் நானும்
தமிழும் சுவையும்
அவளும் நானும்
கரும்பும் கனியும்