இலையுதிர் காலம் - அறிமுகம்

சிவா அழகான அமைதியான பையன், எதிலும் கொஞ்சம் நிதானம் அதிகம் அதனால இவனுக்கு சோம்பேறி எனும் செல்லப்பெயர் உண்டு. இவனது பத்தாம் வகுப்பு வரை அதாவது ட்ரவுசர் போட்ட காலம் வரை இவனுக்கு வாயில் விரல் வைத்தாலும் கடிக்க தெரியாது என சொல்வது போல அப்படி ஒரு நல்ல பையன் ஆமாங்க பச்சை மண்ணு.

படிப்புல கொஞ்சம் நடுத்தரம் தான் தலையில கொட்டி கொட்டி ஏத்துனா எவ்வளவு வீங்குதோ அவ்வளவு மண்டையில ஏறும். வீக்கம் இறங்கின உடனே மட்டை பந்த எடுத்துட்டு பள்ளி மைதானத்துல உச்சி வெயில கூட பாக்காம பயங்கரமா விளையாடுவான். இவனுக்கு மட்டை பந்துனா ரொம்பவும் பிடிக்கும் இல்லை இல்லை நாடி நரம்புலாம் துடிக்கும். வீட்டுல அப்பானா அப்படி ஒரு பயம் இவனுக்கு, சாதா அப்பாவே ரொம்ப கடுமையாதான் இருப்பாங்க வாத்தியார் அப்பானா சொல்லவா வேணும். இன்னொரு கூடுதல் தகவலையும் சொல்லிடுறேன் இவங்க அம்மாவும் ஒரு ஆசிரியை. இவனுக்கு ஆங்கிலம் வராதுங்க அதனால ஆறாம் வகுப்புலையே தனியார் பள்ளில இருந்து பள்ளியே இவனை நிறுத்திடிச்சு அப்புறம் என்ன அரசு பள்ளில சேர்ந்து படிப்பை தொடர்ந்தாரு.

பாவம்ங்க நம்ம சிவா பத்தாம் வகுப்புல எப்ப நுழைஞ்சானோ அப்பவே ஏழரை பிடிச்சிடிச்சு ஆமாங்க பிடிச்ச விளையாட்டை விளையாட முடியாம எப்ப பாத்தாலும் (a + b)2 ரையே படிக்க வச்சா என்ன ஆகும். ஹ்ம்ம்ம் இவனையோ இல்ல பெத்தவங்களையோ குறை சொல்ல ஒன்னும் இல்லைங்க நம்ம நாட்டோட தலை எழுத்து மார்க் வாங்குறவன் தான் ஈரோ மத்தவன்லாம் ஸீரோ அப்படினு நம்ம கல்வி மாறி போச்சு. வெறும் மதிப்பெண் வாங்குற இயந்திரங்களை தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கு இன்றைய கல்வி தொழிற்சாலைகள்.

சிவா மட்டை பந்துல மட்டும் இல்லை கவிதையும் நல்லாவே எழுதுவாப்புல எட்டாவது படிச்சப்பையே கவிதைனு நினைச்சு எதை எதையோ கிறுக்குவாப்புல ஆகா ஓகோ சொல்ல கூடவே ரெண்டு பயலுக வழக்கம் போலவே இருந்தாங்க அப்பவே அப்படினா பாத்துக்கோங்க, இந்த சிவாவுக்குள்ள எத்தனையோ விஷயங்கள் ஒளிஞ்சி இருந்தது போல அது எல்லாம் சரியா கவனிக்க படல. பாவம் வாழ்க்கைனா படிப்பு, படிப்பு, படிப்பு மட்டும் தான்னு சொல்லி வளர்க்கப்படும் சராசரி தமிழக பிள்ளைகள்ல இவன் ஒன்னும் விதிவிலக்கு இல்லைங்க.

நம்ம சிவாவும் சும்மா இல்லைங்க அப்பா அம்மா பேர காப்பாத்துற அளவுக்கு பத்தாவது வகுப்புல நானூறுக்கு மேல மதிப்பெண் எடுத்துட்டாரு யாரு செய்த புண்ணியம்னு தெரியாம இப்ப வரை பெரிய கேள்விக்குறி இருக்குங்க. இதுல கூடுதல் சிறப்பு என்னனா இவரு மேக்ஸ்ல அதாங்க கணிதத்துல நூத்துக்கு நூறு வாங்கினது தான். கடவுளுக்கு கூட தெரியாதுங்க இவன் எப்படி வாங்குனானு. இருந்தாலும் இந்த பையனுக்குல என்னமோ இருந்திருக்கு பாருங்க பரிட்சை முடிவை எடுத்துக்கிட்டு நேரா ஓடி போய் கணித ஆசிரியர் கிட்ட காமிச்சு அன்னைக்கு அடிச்சையே அப்படினு சொல்லாம சொல்லி காமிச்ச கெத்து இப்ப வரை அந்த ஆசிரியர் வேற யாரையும் அடிக்காம இருந்திருப்பார்னு நினைக்குறேன்.

சரிங்க இதுதான் நம்ம சிவாவை பத்தின அறிமுகம். இனி சிவாவோட வாழ்க்கைல என்னென்ன மாற்றங்கள் வருது அவனோட படிப்பு, வயதின் தாக்கம், காதல் இப்படி பல சுவாரசியமான விஷயங்களை நாம பாக்கலாம் ஆனா இப்ப இல்ல கொஞ்சம் பொறுத்துக்கோங்க விரைவில்

(தொடரும் ........)

- கி. கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (23-Mar-17, 10:02 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 93

மேலே